உள்நாட்டு செய்தி
இ. போ. சவிற்கு, புதிய தலைவர்…
இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் எஸ்எம்டிஎல் கேடி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான KD அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய தலைவருக்கான நியமனக் கடிதத்தை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் வழங்கினார்.
இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அல்விஸ், சிரேஷ்ட நிர்வாக அதிகாரியாகவும், போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளராகவும் பணியாற்றியவர்.
இதன்போது, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ. ஆர். பிரேமசிறி மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டனர்.