உள்நாட்டு செய்தி
அரசு ஊழியர் உடை விவகாரம் சுற்றறிக்கை தயார்நிலையில்.
ஆண்கள் கால்சட்டை, சட்டை அல்லது தேசிய உடை, பெண்கள் சேலை மற்றும் ஓசரி அணிய வேண்டும்.
அரச ஊழியர்களின் தொடர்பாக ஏற்கனவே இருந்த இரண்டு சுற்றறிக்கைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு புதிய சுற்று நிருபம் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை இருந்த வசதியான உடையில் பணிக்கு வர வழங்கப்பட்ட வாய்ப்பு, பணியாளர் அலுவலர்கள் தவிர மற்ற அலுவலர்களுக்கு நீக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், அரச சேவைக்கு கால்சட்டை, சட்டை அல்லது தேசிய உடை அணிந்தும், பெண் அதிகாரிகளுக்கு புடவை அல்லது ஒசரி அணிந்தும் பணிக்கு வர வேண்டும் என்ற சுற்று நிருபம் தயாரிக்கப் பட்டு அணுப்பப்படவுள்ளது.