உள்நாட்டு செய்தி
ஏழு கோடிகளுக்கு பகிரப்படும் மதுபானசாலைகளுக்கான உரிமம்
சுபர் மார்க்கட்களில் மதுபான தொகை உரிமம் வழங்குவதன் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையில் கொமிஷன் பணம் பகிரப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறு விநியோகிக்கப்பட்ட தொகை ஒரு உரிமம் ஒன்றுக்கு 70 மில்லியன் ரூபா பாரிய பெறுமதி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகையில் ஏறக்குறைய எழுபத்தைந்து புதிய உரிமங்களை வழங்குவதற்கான ஆயத்தங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.