Connect with us

உள்நாட்டு செய்தி

28இலட்சத்தை கடந்துள்ள தலதா மாளிகை மின்கட்டணம்

Published

on

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கான மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக தியவடனா நிலமே பிரதீப் நிலங்க தெலபண்டார பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
28 இலட்சம் ரூபாவை எட்டியுள்ள ஒக்டோபர் மாதத்திற்கான மின்கட்டணத்தில் திருத்தம் செய்யுமாறு தியவடன நிலமே ஆணைக்குழுவிடம் கோரியுள்ளார்.
அண்மையில் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் மல்வத்து அஸ்கிரி மகா நாயக்க தேரர்களுடன் பொதுப்பணித்துறை தலைவர் கலந்துரையாடியுள்ளதோடு, மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வேலைத்திட்டத்தை இலங்கை மின்சார சபையுடன் கலந்துரையாடி வருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.