உள்நாட்டு செய்தி
தெரிவுச் செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு மாத்திரமே எரிப்பொருள் கோட்டா…
தெரிவுச் செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு மாத்திரமே எரிப்பொருள் கோட்டா வழங்கப்படும் என ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தும் முச்சக்கர வண்டிகளுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
முச்சக்கர வண்டிகளுக்கு நாளாந்தம் வழங்கப்படும் எரிபொருள் கோட்டாவை 5 முதல் 10 லீட்டர் வரை அதிகரித்து வழங்க ஜனாதிபதி அண்மையில் அனுமதி வழங்கியமை குறிப்பிடதக்கது.