Connect with us

உள்நாட்டு செய்தி

லங்கா சதொச அதிரடி

Published

on

ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

குறித்த பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் கொள்வனவு செய்ய முடியும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளைப் பூண்டு விலை 60 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 490 ரூபாயாகவும் ஒரு கிலோகிராம் கோதுமை மா 55 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு கிலோ கிராம் நெத்தலிக் கருவாடு 50 ரூபாயால் குறைக்கப்பட்டு 1,450 ரூபாயாகும் பருப்பு ஒரு கிலோ கிராம் 30 ரூபாயால் குறைக்கப்பட்டு 285 ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது.

மேலும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி 15 ரூபாயால் குறைக்கப்பட்டு 260 ரூபாயாகவும் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி ஒரு கிலோ கிராம் 5 ரூபாயால் 169 ரூபாவாகவும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளன.