உள்நாட்டு செய்தி
ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

நாளை (04) முதல் சகல ரயில் மார்க்கங்களிலும் ரயில் சேவையில் ஈடுப்படும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரதான புகையிரத மார்க்கத்தில் 64 பயண சேவைகளும், கரையோர மார்க்கத்தில் 74 பயண சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதேபோல் களனிவெளி மார்க்கத்தில் 12 பயணச் சேவைகளையும், வடக்கிற்கான 6 ரயில் சேவைகளும் மற்றும் புத்தளம் மார்க்கத்தில் 26 சேவைகளும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.