உள்நாட்டு செய்தி
சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடி நடவடிக்கை
ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சிறுவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.