உள்நாட்டு செய்தி
வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 41 ஆயிரத்து 34 ஐ கடந்துள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதே பணியகம் எதிர்பார்த்துள்ளது.