Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதி விசேட உரை

Published

on

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரை…

சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கடந்த காலங்களில் உரிய முறையில் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனவும், அதனை முறையாக நடைமுறைப்படுத்த முடிந்தால் நாட்டுக்கு பாரிய நன்மைகள் ஏற்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

இந்த ஒப்பந்தம் தென்கிழக்காசியாவுடனான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையில் முதலீடுகளை விஸ்தரிப்பதற்கு ஜப்பான் ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி என்பன ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பான் ஒப்பந்தம் செய்திருப்பது நல்ல அறிகுறி என்று கூறிய ஜனாதிபதி, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளால் ஜப்பானுடனான நட்புறவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சீனாவுடனான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த காலத்தில் இருந்து சீனா எமது நாட்டுக்கு ஆதரவளித்து வருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.