உள்நாட்டு செய்தி
IMF ஒப்பந்தம் தொடர்பில் சபாநாயகர் அறிவித்த விடயம்

சர்வதேச நாணய நிதியத்துடனான(IMF) ஊழியர் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் இதுவரை அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று(22) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
ஊழியர் மட்ட உடன்படிக்கை என்ற போதிலும், அதற்கும் IMF பணிப்பாளர்களின் அனுமதி அவசியமாகும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.