உள்நாட்டு செய்தி
“சமந்தா”விஜயம்

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளமை குறிப்பிடதக்கது.
அவர் இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகளாலும், வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளாலும் விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடும் வகையில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.