Connect with us

உள்நாட்டு செய்தி

மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர்: ராணி எலிசபெத்

Published

on

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக பிரகடனப்படுத்தப்பட உள்ளார்.

இதையடுத்து மகாராணி ராணி எலிசபெத்தின் மூத்த மகனும், நீண்ட கால அரச குடும்ப வாரிசான 73 வயது சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராகிறார்.

இங்கிலாந்து அரசு மரபுப்படி ராணி எலிசபெத் இறந்த முதல் 24 மணி நேரத்தில், சார்லஸ் அடுத்த மன்னர் என லண்டன் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை அக்சஷென் கவுன்சில் நாளை அதிகாரபூர்வ பிரகடனம் வெளியிடுகிறது.

அப்போது அவர் கூறியதாவது: ராணி எலிசபெத்தை இழந்து தவிக்கும் மக்களி்ன் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன். மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர். அன்பு, விசுவாசம், மரியாதையோடு என் வாழ்நாள் முழுதும் மக்களுக்காக சேவை ஆற்றுவேன். நான் விரும்பி செய்யும் சமூக சேவை பணிகளில் என்னால் அதிக நேரம் செலவிட முடியாத நிலை உள்ளது. இங்கிலாந்து இளவரசராக வில்லியம் செயல்படுவார் என தெரிவித்தார்.