Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழை…

Published

on

இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை உருவாகக்கூடிய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே, நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமானவானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

மேல்,தென்,சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப்பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீஅளவானபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.