Connect with us

உள்நாட்டு செய்தி

சீனாவில் புதிதாக 2,804 பேருக்கு கொரோனா தொற்று

Published

on

கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 2,804 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 2,201 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது.

மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,38,183 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.