Connect with us

Sports

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தென்னாபிரிக்க வெற்றி

Published

on

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.

முதல் டெஸ்டில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கையணி தமது முதல் இனிங்சில் 396 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து தமது முதலாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா பெப் டூ பிளசிஸ் பெற்ற 199 ஓட்டங்களுடன் 621 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

மீண்டும் தமது இரண்டாவது இனிங்சில் தென்னாபிரிக்கா அணி பெற்ற இமாலய இலக்கை நோக்கி பதிலளித்த இலங்கை 180 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இதற்கமைய தென்னாபிரிக்க அணி ஓரு இனிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் சென்சூரியனில் இடம்பெற்ற முதல் போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் ஆட்டநாயகனாக பெப் டூ பிளசிஸ் தெரிவானார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஜனவரி 3 ஆம் திகதி ஜேனாகன்ஸ் பேக்கில் நடைபெறவுள்ளது.