Connect with us

Sports

கோலிக்கு விருத்துக்கு மேல் விருது

Published

on

கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்ல் தலைசிறந்த வீரராக இந்திய அணித் தலைவர் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒவ்வொரு வடிவிலான கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் யார் என்பதை இன்று வெளியிட்டுள்ளது.

இதன் போதே கோலிக்கு குறித்த விருது கிடைத்ததுள்ளது.

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளில் தலை சிறந்த வீரருக்கான சேர் காபீல்ட் போபஸ் விருதையும் அவர் வென்றுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக தெரிவுச் செய்யப்பட்டுள்ளார்.

T20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் ரசித் கான் தலைசிறந்த வீரராக தெரிவாகியுள்ளதுடன் எம்.எஸ் தோனி ஸ்பிரிட் ஒஃப் கிரிக்கெட் விருதை வென்றுள்ளார்.