Connect with us

உள்நாட்டு செய்தி

நேற்றைய தினம் மேலும் 122 பேருக்கு கொவிட் தொற்று

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 49 லட்சத்து 02 ஆயிரத்து 034 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 55 கோடியே 54 லட்சத்து 61 ஆயிரத்து 890 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 25 ஆயிரத்து 890 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் நேற்றைய தினம் (02) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 8 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் மேலும் 122 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.