Connect with us

உள்நாட்டு செய்தி

மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்படும் அபாயம்

Published

on

சிறுவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுவது குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொவிட்-19 டெங்கு அல்லது வேறு வைரஸ் காய்ச்சலால் இந்த நிலை ஏற்படக் கூடும் என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது சிறுவர்களுக்கு இடையில் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொவிட் அபாயம் அதிகரித்தால், எதிர்காலத்தில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.