உள்நாட்டு செய்தி
42 ஓட்டங்களுக்கு கதாநாயகன் அவுட்

தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 42 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
மெத்திவ்ஸ் 106 பந்துகளில் 42 ஓட்டங்களை மாத்தரம் பெற்றுக் கொண்டார்.
ஏஞ்சலோ மெத்திவ்ஸ் இலங்கை அணிக்காக 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய 6 ஆவது வீரர் என்பது விசேட அம்சமாகும்.
மெத்திவ்ஸ் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,918 ஓட்டங்களை குவித்துள்ளார்.
அதில் ஒரு இரட்டைச் சதம், 13 சதங்கள் மற்றும் 38 அரைச் சதங்கள் அடங்கும்.
இன்றைய போட்டிக்கு முன்னர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ்க்கு நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.