Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு

Published

on

52 வாக்குகள் வித்தியசாத்தில் இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி பதவிக்காக ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர குமார திஸாநாயக்கவின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன.

அதனடிப்படையில் 223 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எஸ். கஜேந்திரன் மற்றும் ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.

அதனடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும், டலஸ் அழகப்பெருமவிற்கு 82 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை அனுர குமார திஸாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும் 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.