உள்நாட்டு செய்தி
தலைதூக்கும் விசர்நாய்க்கடி
கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் நீர்வெறுப்பு நோயினால் (விசர்நாய்க்கடி நோயினால்) உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது சுகாதார கால்நடை சேவை பணிப்பாளர் டாக்டர். எல்.டி. கித்சிரி இது தொடர்பாக மேலும் கூறுகையில்…
“95 வீதமான நோய்த்தொற்றுகள் நாய் கடிப்பதனால் ஏற்பட்டுவதாகவும், ய்க்குட்டிகள் மூலம் குறித்த நோய் பரவி அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களில் 5 இலட்ச நாய்களுக்கு இலவசமாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 30 ஆயிரம் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டில் 20 முதல் 30 மில்லியன் நாய்கள் உள்ளதாகவும், இருப்பினும் ஆண்டுக்கு சுமார் 1.1 மில்லியன் நாய்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுவதாகவும் அவர் கூறினார்.
70 வீதமான நாய்க்குட்டிகளுக்கு தடுப்பூசி போடப்படுவதன் மூலம் குறித்த நோய் பரவுவதை குறைக்க முடியும் நீர்வெறுப்பு நோயினால் வருடாந்தம் 20 தொடக்கம் 30 வரையான மரணங்கள் ஏற்படுவதாகவும், வருடம் தோறும் ஆறு வாரங்களுக்கு மேல் உள்ள அனைத்து நாய்களுக்கும் விசர்நாய் கடி தடுப்பூசி போடுமாறு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாகவும் கித்சிறி கூறியுள்ளார்.