உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி சிங்கப்பூர் செல்லவில்லை…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதியும் அவரது மனைவியும் நேற்று இரவு மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்தனர்.
சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், ஜனாதிபதி சிங்கப்பூர் செல்லவிருந்த போதிலும், பாதுகாப்பு காரணமாக செல்லவில்லை.
ஜனாதிபதி தனி விமானம் மூலம் மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி சிங்கப்பூர் சென்ற பின்னர் பதவி விலகல் கடிதம் தரப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்திருந்தார்.