உள்நாட்டு செய்தி
பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பேருந்து விபத்து- 16 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
நியோலி-ஷான்ஷெர் சாலையில் உள்ள ஜங்லா பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலையில் இருந்து பள்ளத்தில் விழுந்தது.
இதில் பேருந்து முற்றிலும் சிதைந்தது. பேருந்தில் பயணித்த மாணவர்கள் உள்ளிட்ட 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.