உள்நாட்டு செய்தி
மலையக பிரதேசங்களில் கடும் மழை, பலத்த காற்று

மலையக பிரதேசங்களில் 03.07.2022 அன்று அதிகாலை முதல் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசி வருகின்றது.
இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
வட்டவளை ரொசல்ல ஐட்றி பகுதியில் வெள்ள நீர் பெருக்கத்தால் விவசாய நிலங்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக இப்பகுதியில் 21 வீடுகள் வெள்ள நீரினால் நிரம்பியதுடன், மேலும் சில வீடுகளுக்கு சிறிதளவு வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.