உள்நாட்டு செய்தி
தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்திய விடயம்

தமிழ் முற்போக்கு கூட்டணி நேற்று (28) மாலை இந்திய உயர்ஸ்தானிகரை இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது முகப் புத்தகத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
1)இந்திய அரசால், இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள், மக்களை நேரடியாக சென்று அடைவதை உறுதிப்படுத்தும்படி கோரியுள்ளோம்.
2)சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் உணவு பிரச்சினைக்கு தீர்வு தருவதற்கு முன்னுரிமை வழங்கும்படி கோரியுள்ளோம்.
3)நாடெங்கும் பெருந்தோட்டங்களில், உணவு நெருக்கடியில் சிக்கி தவிக்கும் விளிம்புநிலை குடும்பங்களுக்கு, கோதுமை மா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரியுள்ளோம்.
4)கொழும்பு மற்றும் புற நகர் பகுதிகளில் வாழும் நகர ஏழை பாமர மக்களுக்கு, சமூக சமையல் கூடங்களை அமைத்து “ஒருநாளைக்கு ஒருவேளையாவது” சமைத்த உணவு வழங்க ஏற்பாடு செய்யும்படி கோரியுள்ளோம்.
இந்த கோரிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இந்திய தூதுவர் கோபால் பாகலேயும் சாதகமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இலங்கைக்கு, இந்திய அரசு வழங்கும் உதவிகளுக்குள் இவையும் அடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக பிரதமர் உறுதி வழங்கினார்.
மிக நெருக்கடியான காலகட்டத்தில் எதிர்கட்சியில் இருந்தபடி, இப்பணிகளை தமிழ் முற்போக்கு கூட்டணி செய்கிறது.
இந்திய தூதுவர் கோபால் பாகலேயுடனும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும், இரண்டு வெவ்வேறு சந்திப்புகளை நேற்று தமிழ் முற்போக்கு கூட்டணி நடத்தியது