உள்நாட்டு செய்தி
அமெரிக்க தூதுக்குழு ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை
இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இது ஒரு சவாலான நேரம், ஆனால் இலங்கைக்கு வளமான, பாதுகாப்பான மற்றும் ஜனநாயக எதிர்காலத்தை அடைய உதவும் வகையில் நாங்கள் தொடர்ந்து உதவி மற்றும் நீண்ட கால கூட்டாண்மையை வழங்குகிறோம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் டுவிட் செய்துள்ளார்.
உயர்மட்ட தூதுக்குழுவில் ஆசியாவுக்கான திறைச்சேரியின் துணைச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை இராஜாங்கத் தூதர் கெல்லி கெய்டர்லிங் ஆகியோரும் அடங்குகின்றமை குறிப்பிட்தக்கது.