உள்நாட்டு செய்தி
வலுவான பாதுகாப்புக் கொள்கை அவசியம்
தேசிய பாதுகாப்பை நோக்கிய தனது இலக்குகளை அடைவதை வரையறுப்பதற்கும், நாட்டின் பாதுகாப்பு எந்திரங்களை ஏற்றுக்கொள்ளவும், அதன் மக்கள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும் செயல்திறன் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய வலுவான பாதுகாப்புக் கொள்கை அவசியம் என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு சூழலானது பாதிக்கப்படக்கூடிய, நிச்சயமற்ற, சிக்கலான மற்றும் தெளிவற்ற தன்மை கொண்டது என்பதால், புவிசார் அரசியல் சூழல் மற்றும் பாதுகாப்பு சூழலை வகைப்படுத்தும் முக்கிய காரணிகளின் நிலையான மற்றும் தொடர்ச்சியான மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வு, பல வடிவங்களில் மற்றும் தரங்களில் வரும் சாத்தியமான அச்சுறுத்தலை மதிப்பிட அவசியப்படும்”, என வலியுறுத்தினார்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ‘இலங்கையின் பாதுகாப்புக் கொள்கை, கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம்’என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜெனரல் குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.