உள்நாட்டு செய்தி
இந்திய நிதி அமைச்சர் இதொ.காவுக்கு உறுதியளிப்பு

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும்பொருட்டு, இந்திய நிதி அமைச்சர் கௌரவ நிர்லமா சீத்தாராமன் அவர்களை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த காலங்களில் இந்திய தூதரகத்தின் ஊடாக இலங்கைக்கு பல்வேறு உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு இந்த சந்திப்பின் போது இ.தொ.கா நன்றி தெரிவித்துள்ளது.
மேலும் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து இலங்கையை மீட்டெடுக்க இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் உதவியும் அதிகமாக தேவைப்படுகிறது.
இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் மக்கள் பொருளாதாரம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.
இருப்பினும் இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடவை எதிர்நோக்கிவருகின்றது.
இவ்வேலையில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்கூட வாய்ப்பில்லாத நிலை தோன்றியிருக்கின்றது.
எனவே தான் இந்த நெருக்கடிக்கு இந்திய அரசாங்கம் நல்லிணக்க அடிப்படையில் உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தூது குழு வலியுறுத்தி இருக்கின்றது.
இதன்போது இந்தியாவின் நிதி அமைச்சர் இதற்கான சாதகமான நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.