Connect with us

உள்நாட்டு செய்தி

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Published

on

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் பல பிரதேசங்களில் ஓரளவு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகிஸ்வர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொடரும் சீரற்ற காலநிலையால் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது9