உள்நாட்டு செய்தி
வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்தி அமைதியாக செயற்படுங்கள்: ஜனாதிபதி
அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், பொதுமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்தி அமைதியாக இருக்குமாறு மக்களை கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு ஆணைக்குள் ஒருமித்த கருத்து மூலம் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.