உள்நாட்டு செய்தி
அரசாங்கத்திற்கு எதிராக இன்று ஹர்த்தால்

அரசாங்கத்திற்கு எதிராக இன்று நாடளாவிய ரீதியிலான பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாடளாவிய ரீதியில் இன்று ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு அமைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகாத நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.