Connect with us

உள்நாட்டு செய்தி

CWC தலைவர் செந்தில் தொண்டமான் – தவிசாளர் ரமேஷ்வரன் தேசிய சபையில் ஏகமனதாக தெரிவு

Published

on

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC) என்பது ஜனநாயக்க மிக்க அமைப்பாகும்.

எனவே, தனிநபர் முடிவுகளுக்கு அப்பால் கட்சியாக கலந்துரையாடியே முடிவுகள் எடுக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் நேற்று (30) கொட்டகலையிலுள்ள சி.எல்.எவ் வளாகத்தில் நடைபெற்றது.

இதன் பின் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமானும், தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

நிதிச்செயலாளர் பதவியும் மருதபாண்டி ராமேஸ்வரன் வசமே உள்ளது.

அதன்பின்னர் பிரதித் தலைவர் உட்பட இதர பதவிகளுக்கு வாக்கெடுப்புமூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி பிரதித் தலைவர்களாக மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான கணபதி கனகராஜும், அனுசியா சிவராஜாவும் தெரிவாகினர்.

பிரதித் தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரையும், அரசியல் தேசிய அமைப்பாளராக முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சக்திவேலும், தொழிற்சங்க பிரிவு தேசிய அமைப்பாளராக லோகதாஸ், பிரதி பொதுச்செயலாளராக செல்லமுத்தும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அரசியல் பிரிவு உதவி தேசிய அமைப்பாளராக ராஜமணி பிரசாந்தும், தொழிற்சங்க பிரிவு உதவி தேசிய அமைப்பாளராக பழனி சசிக்குமாரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்