உள்நாட்டு செய்தி
ஆளுங்கட்சியை நம்பி இருந்தால் நானும் மாவு அமைச்சராகவே இருந்திருக்க வேண்டும் – திகாம்பரம்

” இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான போராட்டம் மலையக மண்ணில் இருந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே, தலவாக்கலையில் ஏப்ரல் 03 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்று, அரசை வீட்டுக்கு அனுப்ப எம்முடன் அணிதிரளுங்கள்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் அறைகூவல் விடுத்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்துள்ள மகளிர் தின விழா இன்று அட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.