உள்நாட்டு செய்தி
திங்கட்கிழமை முதல் சேவையில் ஈடுபட போவதில்லை: கெமுனு
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சேவையில் ஈடுபட போவதில்லை என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
‘பஸ்களுக்கு பழைய விலைக்கே எரிபொருளை பெற்றுக் கொடுத்தால், மற்றவை எவ்வளவு அதிகரித்தாலும் பேருந்து கட்டணத்தை திருத்த மாட்டோம். நாளைக்குள் முடிவு தெரிய வேண்டும். மானியம் வழங்கவில்லை என்றால், 15 வீத பேருந்து கட்டண திருத்தத்திற்கு செல்ல வேண்டி ஏற்படும்’ என்றார்.