Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று அதிக நேர மின் வெட்டு

Published

on

இன்று (02) நாடளாவிய ரீதியில் ஏழரை மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து பகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணி நேர மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.