உள்நாட்டு செய்தி
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல்: விசாரணைகள் ஆரம்பம்

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசேட குழுவொன்று, விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (14) அதிகாலை 2.10 அளவில் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பில் ஊடகங்களை தெளிவுப்படுத்திய ஊடகவியலாளர் சமுதித்த …
“வீட்டின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன. அத்துடன் மனித கழிவுகளாலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனது வீட்டின் காவலாளர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளார். வேன் ஒன்றில் வந்த 4 பேர் அடங்கிய குழுவே தாக்குதலை நடத்தியுள்ளது. முகத்தை மூடியபடி மூவர் வீட்டில் தாக்குதலை நடத்தியுள்ளனர். அனைத்து காட்சிகளும் பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளன. ஏற்கனவே தொலைப்பேசி ஊடாக பலஅ ச்நுறுத்தல்கள் வந்தன. எனினும் இவ்வாறான தாக்குதல் நடந்திருப்பது இதுவே முதல் முறை. சுதந்திர ஊடக செயற்பாட்டிக்காகவே நான் எப்போதும் செயற்பட்டுள்ளேன். இதன் ஊடாக எதை சாதிக்க எதிர்பார்க்கின்றனர் என்பது தெரியவில்லை. தாக்குதல் நடத்தியது யார் என்பதை அறியேன். எனினும் எனது குரலை மௌனிக்க செய்ய முடியாது.”