உலகம்
புட்டினுக்கும், ஜின்பிங்குக்கும் இடையில் சந்திப்பு

ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று சீனாவுக்கு சென்று அந்த நாட்டு ஜனாதிபதி ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது, உக்ரைன் பிரச்சினை, கொரோனோ தொற்று உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
சீன ஜனாதிபதி ஜின்பிங் கடந்த 2 ஆண்டுகளில் சந்தித்த முதலாவது வெளிநாட்டு தலைவர் புட்டினாவார்.
உக்ரைன் விவகாரத்தில் ரஸ்யாவுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் நெருங்கிய நட்பு நாடான சீனா ஜனாதிபியை புடின் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது.