உள்நாட்டு செய்தி
‘சவால்களை முறியடிக்கும் வளமான தாய்நாடு’ 74 ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று
இலங்கையின் 74 ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று (04) கொண்டாடப்படுகிறது.
பிரதான சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
‘சவால்களை முறியடிக்கும் வளமான தாய்நாடு’ என்பதே இம் முறை சுதந்திர தினத்தின் தொனி பொருளாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் தலைமையில் இன்று காலை 8.13 க்கு பிரதான நிகழ்;வுகள் இடம்பெறவுள்ளன.
முதலில் நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட பின் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
அதனைத் தொடர்ந்து முப்படையினரினரின் அணி வகுப்பு இடம் பெறவுள்ளது.
அத்துடன் கலாசாரக் குழுக்களின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.