உள்நாட்டு செய்தி
“ஏப்ரல் மாதம் வரை எந்தச் சிக்கலும் இன்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும்”
எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை மின் துண்டிப்பு இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் தேவையில்லாமல் அஞ்ச வேண்டியதில்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுரைச்சோலை மின்நிலையம் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதனால் எந்தச் சிக்கலும் இன்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
மின் விநியோகத்தை நிறுத்தி மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவது எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பாக உள்ள போதிலும் அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்கி மின்விநியோகத்தைத் தொடர்ந்தும் வழங்கி வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே சுட்டிக்காட்டினார்.