உலகம்
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி-நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படாது.
பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் சேவைகள் முற்றிலும் இயங்காது.
குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கான இன்று பால், பத்திரிகை வினியோகம், பெட்ரோல் நிலையங்கள், மருத்துவம், மருந்தகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.