Connect with us

Sports

டெய்லருக்கு வெற்றியால் பிரியாவிடை

Published

on

பங்களாதேஸ்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் கிறிஸ்ட்சர்ச்சில் இன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி 117 ஓட்டங்களாலும் ஒரு இனிங்சாலும் வெற்றி பெற்றது.

ஏற்கனவே முதல் டெஸ்ட்டில் பங்காளதேஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றமை குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இதேவேளை, இன்றைய போட்டியுடன் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் ரோஸ் டெய்லர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றமை குறிப்பிடதக்கது.