மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக இ.தொ.கா பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும் இது ஆரம்பம் மட்டுமே எனவும் கம்பனிகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான தொழிற்சங்க ஆட்டம் தொடரும்...
பெருந்தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் பிரிந்திருப்பதை தவிர்ப்பதற்காக கூட்டு தொழிற்சங்க நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றிய போது அவர் இதனை கூறியுள்ளார்.
“ எவ்வாறு தொழிற்சங்க பலத்தை காட்ட வேண்டும் என்பது தொடர்பில் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான், காங்கிரஸில் உள்ள எங்கள் அனைவருக்கும் சிறப்பாக பயிற்றுவித்துள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதி மஸ்கெலியா பிளாண்டேசனுக்கு உட்பட்ட பகுதிகளில்...
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டெழ சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இலங்கை தொழிலாளர்...
கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் தொழிலாளர்களுக்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை சமரச பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக குறித்த தோட்டத்தில் பல்வேறு கெடுபிடிகளை தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் மீது நடத்தி வந்துள்ளது....
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்துக்கு எதிராக, முதலாளிமார் சம்மேளனத்தால் தாக்கல்செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) தள்ளுபடி செய்துள்ளது. மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து சங்கங்களும் கூட்டாக கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுத்துவிட்டது. கூட்டு ஒப்பந்தம் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல்போனாதால், தொழில் அமைச்சு தலையிட்டது. அதன்பின்னர் சம்பள நிர்ணய சபை ஊடாக நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா நிர்ணயிக்கப்பட்டது. இந்த முடிவை முதலாளிமார் சம்மேளனம் ஏற்கவில்லை. சம்பள நிர்ணய சபையின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினர். இது தொடர்பான மனு இன்று (09.08.2022) விசாரணைக்கு வந்தபோது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் மனு தள்ளுப்படி செய்யப்பட்டது என பாரத் அருள்சாமி குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ” மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொழிலாளர்களுக்கும், காங்கிரசுக்கும் கிடைத்த வெற்றியாகும். அதேபோல தொழிலாளர்களை அடக்கி ஆளலாம் என எவரும் நினைக்ககூடாது. வாழ்க்கை செலவுக்கேற்பவே சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்படும். தற்போது வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பது குறித்து நாளைய தினம் (10) விசேட...
” என் உயிரிலும் மேலான மக்கள் செல்வங்களை எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை விடைபெற்றுள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், எதிரணியில் இருந்தாலும் மக்களுக்கான எனது சேவைகள் தொடரும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,...
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும்பொருட்டு, இந்திய நிதி அமைச்சர் கௌரவ நிர்லமா சீத்தாராமன் அவர்களை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சந்தித்து கோரிக்கை...
” இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது. அன்று அனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கின்றார்.” இவ்வாறு...
அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக CWC பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.