முன்னாள் ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா தனது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை குறித்து இன்று பாராளுமன்றத்தில் உணர்ச்சிபூர்மான உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். தன்னிடம் தற்போது மீதமிருப்பது அணிந்திருக்கும் ஆடை மாத்திரமே எனவும் அவர் கூறியுள்ளார். அண்மையில் நடந்த...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ். போபண்ணா அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த...
நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெட்ரோல் கிடைக்காது என்றும், பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனினும்,...
தமிழக அரசு வழங்குவதாக உறுதியளித்த நிவாரணப்பொருட்களை ஏற்றிய கப்பல் இன்று (18) சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கை வரவுள்ளது. இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டொன் அரிசி,...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை வகுப்புகள், கருத்தரங்குகள்,...
இன்று முதல் 80 ஆயிரம் காஸ் (GAS) சிலிண்டர்கள் நாளாந்தம் விநியோகிக்கப்படும் என லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். காஸ் சிலிண்டர்கள் அடங்கிய இரண்டு கப்பல்களுக்கு நேற்றிரவு பணம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்....
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக ஐக்கி மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றது. இதனை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முடிவடையும் வரை பகுதி நேர வகுப்புக்கள், செயலமர்வுகள்,...
பாராளுமன்ற கலாசாரத்தை மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (17) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்று முழு பாராளுமன்றமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.
புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார். அஜித் ராஜபக்ஸவிற்கு ஆதரவாக 109 வாக்குகளும் ரோஹினி கவிரத்னவிற்கு ஆதரவாக 78 வாக்குகளும் கிடைத்துள்ளதுடன், 23 வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.