நாளை (08) சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. சில நாட்களுக்குள் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய...
அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய வகையில் மாவட்ட மட்டத்தில் இந்த நிகழ்ச்சிகள் இணையவழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன....
அனைவருக்கும் மூன்று வேளை உணவு வழங்கும் முறையை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேவைப்படுபவர்களுக்கு மானியம் வழங்குவது குறித்தும் பரிசீலித்து வருவதாக பிரதமர் கூறுகிறார். பாராளுமன்றத்தில் இன்று(07) பிரதமர் ஆற்றிய விசேட உரையில்...
பெரும் போக செய்கைக்கான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்காக, இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் இருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, 2022/23 பெரும் போக செய்கைக்கு...
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து 50 கிலோகிராம் சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை ரூபா 3,000 என சீமெந்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஒரே நாளில் புதிதாக 3 லட்சத்து 12 ஆயிரத்து 753 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 701 பேர் உயிரிழந்தனர். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 21 ஆயிரத்து...
இங்கிலாந்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். கடந்த 2020 ஆண்டு கொரோனா முதல் அலையினால் இங்கிலாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை...
அடுத்த இரண்டு வருடங்களுக்கு தாம் தொடர்ந்தும் ஜனாதிபதியாக செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Bloomberg News உடனான நேர்காணலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தான்...
காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமைச்சருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம் அதனை 5 வருடங்களுக்கு ஒத்திவைத்தது....
அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது விற்பனை செய்யப்பட்ட அனுமதி சீட்டுகள் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதையும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.