Connect with us

உலகம்

உலகின் பல்வேறு நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்

Published

on

கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருந்த போதிலும் உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாட்டங்கள் களை கட்டின.

புத்தாண்டை முதலில் வரவேற்ற நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், உள்ளூர் நேரப்படி டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி ஆனதும் லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களைகட்டியது.

நகரமே வண்ணமயமாக காட்சியளித்தது.

இதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா 2022 ஆண்டை வரவேற்றது. \

அங்குள்ள சிட்னி துறைமுகப்பகுதியில் வானத்தை வண்ணயமாக்கும் வகையில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஜனவரி 1ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கனடா, அமெரிக்காவிலும் புத்தாண்டு பிறக்கும்.

நாளை மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடாக பேக்கர் தீவு மற்றும் ஹாவ்லாந்து தீவு இருக்கும்.

2022 ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.