Sports
இந்திய 19 வயதுக்கு உட்பட்டோர் அணி சாம்பியனானது.

19 வயதக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ணத்தை இந்திய 19 வயதுக்கு உட்பட்டோர் அணி 9 விக்கெட்டுக்களால் வென்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
போட்டியின் 33 ஆவது ஓவரில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது போட்டியில் மழை குறுக்கிட்டது.
இதனையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இரு அணிகளுக்கும் 38 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கமைய, 38 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களைப் இலங்கை இளையோர் அணி பெற்றுக் கொண்டது.
இதற்கமைய, டக்வொர்த் லூயிஸ் முறைக்கமைய 99 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய இளையோர் அணி 21.3 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் வெற்றி இலக்கை அடைந்தது.