Connect with us

உள்நாட்டு செய்தி

மன்னாரில் 2 ஆயிரத்து 236 குடும்பங்கள் பாதிப்பு

Published

on

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் 2 ஆயிரத்து 236 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 749 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் 15 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான சமைத்த உணவுகளை வழங்க பிரதேசச் செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலகர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை காற்றுடன் கூடிய மழை காரணமாக தலைமன்னார்,பேசாலை உள்ளிட்ட மன்னார் மாவட்டத்தில் கடற்கரையோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு தொகுதி படகுகள் சேதமடைந்துள்ளன.

50 இலுவைப்படகுகள்(டோலர்), 200 இற்கும் மேற்பட்ட கண்ணாடியிழைப்படகுகள், மற்றும் 200 ற்கும் மேற்பட்ட வள்ளம் போன்றவை சேதமடைந்துள்ளன.