உள்நாட்டு செய்தி
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்து: புதிய பஸ் சேவை
திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி ஆற்றில் படகுப்பாதையை செலுத்தியவர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பியுள்ளனர்.
தப்பியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
படகுப்பாதை கவிழ்ந்ததில் 4 மாணவர்ர்கள் அடங்களாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 20 பேர் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் விபத்து தொடர்பில் விசாரணை நடத்த கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யாஹபத் குழுவொன்றை நியமித்துள்ளார்.
இந்த குழு இன்று அந்த பகுதியில் விசாரணைகளை நடத்தவுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவத்தை அடுத்து குறிஞ்சாக்கேணியில் இருந்து கிண்ணியாவிற்கு இ.போ.ச பஸ் இன்று முதல் சேவையை ஆரம்பித்துள்ளதுமை குறிப்பிடதக்கது.