Sports
LPL தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் விளக்கம்

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வீரர்கள் தெரிவு வெளிப்படையாக நடைபெற்றதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் (SLC) தெரிவித்துள்ளது.
உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டே தொடருக்கான வீரர்கள் தெரிவு செய்யப்பட்டதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில வீரர்கள், எல்.பி.எல். தொடருக்கு உள்வாங்கப்படாமை குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹெல ஜயவர்தன வெளியிட்ட விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஸ்ரீ லங்கா கிரிக்கெட் இதனை தெரிவித்துள்ளது.